தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
பேரணி
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி 3-வது மைல், பாலிடெக்னிக், மில்லர்புரம், வி.வி.டி சிக்னல், கோர்ட் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தியும் மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்காமல் ஜனநாயகத்தின் கடமையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலர் (தூத்துக்குடி) விநாயகம், துணை கலெக்டர் (பயிற்சி) சதீஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story