திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்


திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 15 March 2021 8:04 PM IST (Updated: 15 March 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர்:-
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வடமாநில தொழிலாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.
ஹோலி பண்டிகை 
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் வடமாநில தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேரும் என மொத்தம் 8 லட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
இதில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் விடுமுறை நாளில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தான் இருப்பார்கள். இவர்கள் தீபாவளி பண்டிகை மற்றும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தொழிலாளர்கள் குவிந்தனர் 
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இந்த மாத இறுதியில் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு ரெயிலில் செல்ல ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று நூல் விலை உயர்வை கண்டித்து பனியன் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடந்ததால், இந்த தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானவர்கள் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று சொந்த ஊர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, சென்றனர். 

Next Story