மீனவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்


மீனவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 15 March 2021 8:35 PM IST (Updated: 15 March 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பாம்பனில் மீன்பிடி படகுகளில் நின்றபடி மீனவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

ராமேசுவரம், 
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பாம்பனில் மீன்பிடி படகுகளில் நின்றபடி மீனவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் பாம்பன் கடல் பகுதியில் நேற்று ஏராளமான நாட்டு படகுகளில் மீனவர்கள் கைகளில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்குகள் விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட வாக்களிப்பது குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி படகுகளில் நின்றபடி நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
துண்டுபிரசுரம்

மீன்பிடி படகுகளில் நின்றபடி மீனவர்கள் ஈடுபட்டிருந்த இந்த விழிப்பு ணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாம்பன்ரோடு பாலத்தில் நின்றபடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடமும் வாக்க ளிப்பது குறித்த துண்டு பிரசுரம் கொடுத்து பிரசாரம் செய்தார். உடன் மீன்துறை துணை இயக்குனர் இளம்வழுதி, தாசில்தார் அப்துல் ஜபார், மீன் துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story