தாராபுரம் அருகே மாதேஸ்வரன் கோவில் தீப்பிடித்து எரிந்தது. நாச வேலை காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தாராபுரம் அருகே மாதேஸ்வரன் கோவில் தீப்பிடித்து எரிந்தது. நாச வேலை காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே மாதேஸ்வரன் கோவில் தீப்பிடித்து எரிந்தது. நாச வேலை காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவில்
தாராபுரம் அருகே பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கோகுலம் காலனியில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பூஜை செய்து வழிபாடுவது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல பூசாரி பூஜைகளை செய்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். காலை 9.30 மணியளவில் கோவில் முன்பகுதியில் போடப்பட்டு இருந்த பந்தலில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் திடீரென்று பந்தல் தீப்பிடித்து எரிந்தது.
நாச வேலையா?
உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் ஒரு கோவிலின் பகுதி எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்து குறித்து நாசவேலை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story