முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம்


முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 15 March 2021 9:15 PM IST (Updated: 15 March 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம்

முத்தூர்;
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு  முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம் நடைபெற்றது
முத்தூர்
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள 28 அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் முதல் கட்டகுடற்புழு நீக்க மருத்துவ முகாம் நேற்று காலை நடைபெற்றது. இம்முகாமில் வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர். ராஜலட்சுமி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள்.பிரசாத்தாமரைக்கண்ணன், மார்கினி வினோதினி, நவீனா நடமாடும் மருத்துவக்குழு டாக்டர், ஆகியோர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவ - மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. 
இதன்படி இப்பகுதியில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 1350 குழந்தைகள், மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.இம்முகாமில் பகுதி சுகாதார செவிலியர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நத்தக்காடையூர்
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நத்தகாடையூர், மருதுறை பழையகோட்டை, பரஞ்சேர்வழி ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள 18 அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சாவடிப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர், முரளி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள். சவுமியா, குணபிரசாத், நவமணி ஆகியோர் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் மொத்தம் 1028 குழந்தைகள், மாணவ - மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் பகுதி சுகாதார செவிலியர் காமாட்சியம்மாள், சுகாதார ஆய்வாளர் தேவராஜன் மற்றும் மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விடுபட்ட குழந்தைகள்
இதன்படி முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் நேற்று முதல் கட்டமாக நடந்த முகாமில் ஒரே நாளில் மொத்தம் 2 ஆயிரத்து 378 குழந்தைகள், மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் 18-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த குடற்புழு நீக்க மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மேலும் 2-ம் கட்ட மருத்துவ முகாம் வருகிற 22-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை  தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த 2 முகாம்களிலும் விடுபட்ட குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 29 -ந் தேதி வரை குடற்புழு நீக்க மாத்திரைகள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறை மருத்துவ குழு மூலம் வழங்கப்பட உள்ளது.

Next Story