உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பருவத்தேர்வு தொடக்கம்
உடுமலை கல்வி மாவட்டத்தில்பிளஸ்2 மாணவர்களுக்கு பருவத்தேர்வு தொடக்கம்
உடுமலை,
இந்த ஆண்டு பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள அந்தந்த மேல்நிலைப் பள்ளிகளில் முதல் பருவத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு காலையில் 11.15 மணி முதல்12.45 மணி வரையிலும் பிற்பகலில் 3 மணி முதல் 4.30 மணிவரையிலும் நடக்கிறது.
அதன்படி நேற்று கணிதம், தாவரவியல், பொருளியல், சத்துணவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இயற்பியல்,
வணிகவியல், கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும் நாளை (புதன்கிழமை) உயிரியல், விலங்கியல், வணிககணிதம், வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களுக்கும், நாளைமறுநாள் வேதியியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கும் இந்த பருவத்தேர்வுகள் நடக்கிறது. உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பருவத்தேர்வு நடந்தது. பள்ளி தலைமையாசிரியை விஜயா, உதவித்தலைமையாசிரியர் சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடந்த தேர்வை 225 மாணவிகள் எழுதினர்.
Related Tags :
Next Story