சின்னசேலம் அருகே ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது


சின்னசேலம் அருகே ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 15 March 2021 10:43 PM IST (Updated: 15 March 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது

சின்னசேலம்

சின்னசேலம் அருகே வரதப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மகன் பெரியசாமி (வயது 36). தொழிலாளியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று பெரியசாமி வெளியூர் சென்றுவிட்டார். இவரது தாயார் பார்வதி மட்டும் வீ்ட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 2 மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடிச்சென்று விட்டனர்.

வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய பெரியசாமி இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார்(34), அக்கராபாளையத்தை சேர்ந்த வேலு(34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story