போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது


போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 March 2021 11:34 PM IST (Updated: 15 March 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் மணக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவரது ஊருக்கு அருகே உள்ள பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியோடு சூர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரையும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சூர்யா அம்மாணவியை பழனிக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்துள்ளார். அதன்பின் சாக்கோட்டை போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்ததை அறிந்த சூர்யா அந்த மாணவியுடன் கீரனூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் கீரனூர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மைனர் பெண் என்பதால் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story