புதிதாக 18 பேருக்கு கொரோனா
புதிதாக 18 பேருக்கு கொரோனா
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 7 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 78 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். அதன்படி, மதுரையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 462 ஆக உள்ளது.
மதுரையில் நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story