அ.தி.மு.க., அ.ம.மு.க. உள்பட 4 பேர் வேட்பு மனுதாக்கல்
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் அ.ம.மு.க., நாம் தமிழர் உள்பட 4 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
சிவகங்கை,

அ.தி.மு.க. வேட்பாளர்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள பெறப்படுகின்றன. சிவகங்கை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த 12-ந்தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் விடுமுறை ஆகும்.
15-ந்தேதியான நேற்று 2-வது நாளாக வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் அலுவலரான முத்துக்கழுவனிடம் கொடுத்தார்.அவருடன் காளையார் கோவில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் தேவதாஸ் ஆகியோர் உடன் சென்றனர்.முன்னதாக வேட்பாளர் செந்தில்நாதன் சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து சாமி கும்பிட்டு விட்டு அங்கு இருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.பின்னர் அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
அ.ம.மு.க.
அ.ம.மு.க. வேட்பாளர் வக்கீ்ல் அன்பரசன் நேற்று சிவகங்கை தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலர் முத்துக்கழுவனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மல்லிகா ரமேஷ் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
மேலும் சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவி என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பால்பாண்டி, ரவிச்சந்திரன், மற்றும் திருமலை ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story