வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மதுரை
துளசி பார்மசி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கையெழுத்து போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 3, 4, 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கையெழுத்து போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்குதல் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டத்தில் உள்ள துளசி பார்மசியின் கிளைகளில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கேமராவும், 2-ம் பரிசாக சைக்கிளும், 3-ம் பரிசாக டேபிளும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story