பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 March 2021 1:51 AM IST (Updated: 16 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நகை பறிப்பு

நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை சின்னக்கன்னு நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி தாரணி(வயது 29). இவர் அப்பகுதியிலுள்ள வங்கிக்கு சென்று விட்டு மதுரை-தேனி சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாரணி அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலிைய பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தாரணி கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத்தேடி வருகின்றனர்.

Next Story