மணல் கடத்திய லாரி பறிமுதல்; உரிமையாளர் கைது
மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கொள்ளிடக்கரை பகுதியில் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் மற்றும் உதவியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிட கரையில் வந்த லாரியை மறித்து சோதனையிட்டபோது, அதில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, லாரியை ஓட்டி வந்த டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் காரைக்குடியை சேர்ந்த கணேசன் (56) என்பவரை கைது செய்தார். மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும், மணல் கடத்தி வரப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story