கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது


கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 16 March 2021 2:21 AM IST (Updated: 16 March 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திைசயன்விளை, மார்ச்:
திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). அங்குள்ள உலகம்மன் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார். நேற்று முன்தினம் கோவில் பூசாரி பூஜையை முடித்து சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, அதே ஊரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (33) கோவில் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து திசையன்விளை போலீசில் ஒப்படைத்தனர் இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து உண்டியல் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story