24 பேர் மனு தாக்கல்


24 பேர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 16 March 2021 2:29 AM IST (Updated: 16 March 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

24 பேர் மனு தாக்கல்

விருதுநகர்,
மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளன்று திருச்சுழி தொகுதியில் மட்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2 நாட்கள் அலுவலக விடுமுறை நாட்களாக இருந்ததால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று வேட்பு மனுத்தாக்கல் 7 தொகுதிகளிலும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 7 தொகுதிகளிலும் 24 பேர் 40 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 3 மனுக்கள் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story