வாகனம் மோதி கொத்தனார் பலி
வாகனம் மோதி கொத்தனார் பலி.
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி கிராமம் பவளத்தானூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38), கொத்தனார். நேற்று வழக்கம் போல அருகிலுள்ள ஏரிக்கு தனது நண்பர் ராதாவுடன் தாரமங்கலம் புறவழிச்சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது பவளத்தானுர் பகுதியில் இருந்து பெரியாம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்துகொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் தனது கட்டுப்பாட்டை இழந்து கண்ணன் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கண்ணனை, அவரது நண்பர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கண்ணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கண்ணனின் மனைவி கோகிலா (36) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனார் மீது மோதிவிட்டு தப்பி சென்ற நபரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story