கெலமங்கலத்தில் காரில் கொண்டு சென்ற ரூ.1.12 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

கெலமங்கலத்தில் காரில் கொண்டு சென்ற ரூ.1.12 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 March 2021 7:35 AM IST (Updated: 16 March 2021 7:35 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலத்தில் காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.12 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.12 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ஓசூர் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமசாமிசெட்டி ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
 அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் இருந்தது. இதுதொடர்பாக காரில் வந்த சுனில் (வயது 39) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிரானைட் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கொண்டு சென்றது தெரியவந்தது.
பணம் பறிமுதல்
ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து சுனில் காரில் கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Next Story