வாடகையை செலுத்த கால அவகாசம் கேட்டு வியாபாரிகள், கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டம் ஊத்தங்கரையில் பரபரப்பு


வாடகையை செலுத்த கால அவகாசம் கேட்டு வியாபாரிகள், கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டம் ஊத்தங்கரையில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2021 7:36 AM IST (Updated: 16 March 2021 7:36 AM IST)
t-max-icont-min-icon

வாடகையை செலுத்த கால அவகாசம் கேட்டு கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி:
வாடகையை செலுத்த கால அவகாசம் கேட்டு கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடை வாடகை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பழைய திருப்பத்தூர் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமாக 20 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் வியாபாரிகள் காய்கறி, மளிகை, செல்போன்கள் என பல தரப்பட்ட கடைகளை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 
இதனால் பல மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் கடைகளை திறந்து வியாபாரிகள் வணிகம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2 மாதம் வாடகையை குறைத்து 10 மாத வாடகையை செலுத்த வேண்டும் என வியாபாரிகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் நிபந்தனை விதித்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கடைகளின் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடகை தள்ளுபடி
இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பேரூராட்சி 2 மாத வாடகையை மட்டும் எங்களுக்கு தள்ளுபடி செய்து, மீதமுள்ள 10 மாத வாடகையை உடனே கட்ட வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் நாங்கள் 6 மாதமாவது கடை வாடகை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடகை கட்ட மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே வேறு வழியின்றி நாங்கள் கடைகள் முன்பாக கருப்பு கொடி கட்டிஉள்ளோம் என்று கூறினர்.
ஊத்தங்கரையில் வியாபாரிகள் கடைகள் முன்பு கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story