முகக்கவசம் அணியாமல் பணியாற்றிய 4 பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு அபராதம்
முகக்கவசம் அணியாமல் பணியாற்றிய 4 பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை காந்திபுரம், 100 அடி ரோடு, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள் ஆகியோர் முக கவசம் அணிந்து உள்ளனரா?, சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் முறையாக முகக்கவசம் அணிந்து உள்ளனரா என்று ஆய்வு செய்தார்.
இதில் 4 பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் முகக்கவசம் இன்றி பணிபுரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.500-ம், முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் 15 பேருக்கு தலா ரூ.100-ம் அபராதமாக விதித்து ஆணையாளர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story