ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
ஊட்டி
ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ், ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்று நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீரென ஆய்வு மேற்கொண்டார். வணிக நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்று ஆய்வு செய்தார்.
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். பயணிகளிடம் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பஸ்களில் பயணம் செய்யும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் கட்டாயம் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story