கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்


கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 16 March 2021 8:23 AM IST (Updated: 16 March 2021 8:23 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

குன்னூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் வினோத் ராமு(வயது 28). இவர் தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடியை சேர்ந்த சுரேஷ்(27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். 

பின்னர் நேற்று ஊட்டியில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை வினோத் ராமு ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லெவல் கிராசிங் பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு வினோத் ராமு, சுரேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த சிபு என்பவர் லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் போலீசார், பலத்த காயம் அடைந்த வினோத் ராமு, சுரேஷ் ஆகியோரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக குன்னூர் லெவல் கிராசிங் பகுதியல் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story