வாக்காளர் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி
வாக்காளர் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதனை சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது ரபி, நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நலச்சங்க செயலாளர் ஆல்வாஸ், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன், மாநில கைப்பந்து வீராங்கனை திவ்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோத்தகிரி தாலுகா அளவில் நாக்-அவுட் முறையில் நடந்த இந்த போட்டியில், மொத்தம் 9 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய ஏ.எஸ்.எப் கீழ்கோத்தகிரி மற்றும் பி.பி.எஸ்.சி. பக்காடா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பின்னர் நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில் 24-23, 24-23 என்ற செட் கணக்கில் ஏ.எஸ்.எப் கீழ்கோத்தகிரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
மேலும் ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த பி.பி.எஸ்.சி. பக்காடா அணிக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவு நாளில் அனைவரும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story