கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பையா கவுண்டர் வேட்புமனு தாக்கல்


கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பையா கவுண்டர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 16 March 2021 11:54 AM IST (Updated: 16 March 2021 12:15 PM IST)
t-max-icont-min-icon

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) ஆர் கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கவுண்டம்பாளையம் :

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தே தி நடக்கிறது. இதில் போட்டியிட கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிச்சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


குலதெய்வ கோவிலில் வழிபாடு

அப்போது கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.முன்னதாக பையா கவுண்டர் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்புமனுதாக்கல் செய்ய புறப்பட்டார்.அப்போது நிர்வாகிகள் அவருக்கு உற்சாகமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாவலன், தி.மு.க. நிர்வாகிகள் டி.பி.சுப்ரமணியம், கதிர்வேல்சாமி, பழனிசாமி, சுதாவிமலன், வடவள்ளி துரைசாமி, நந்தகுமார், கணேச மூர்த்தி, குப்புசாமி.மணி என்கிற விஜயகுமார், சுப்பையன், சுந்தரம், ரகுபதி, தியாகராஜன், மதன், கவிதா, சிவக்குமார், சுரேஷ், மோகன் குமார், அரசூர் பூபதி, மதியழகன், அருள்குமார்.சிவா என்கிற பழனிச் சாமி, பொன்னுசாமி, கார்த்திக், கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார், ஜனார்த்தனன், விஸ்வபிரகாஷ், ராசு, பார்த்திபன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story