ஜோலார்பேட்டை அருகே பூம்பூம் மாடுகளை வைத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறித்தி விழிப்புணர்வு பிரசாரம்
ஜோலார்பேட்டை அருகே பூம்பூம் மாடுகளை வைத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறித்தி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
ஜோலார்பேட்டை
விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பூம் பூம் மாடுகளை வைத்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குடுகுடுப்பை காரர்கள் மற்றும் பூம்பூம்மாடுகளை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியைதொடங்கிவைத்தனர்.
அப்போது குடுகுடுப்பை காரர்கள் பூம்பூம் மாட்டிடம் நல்ல காலம் பிறக்குமா?, எல்லோரும் வந்து காசு வாங்காம ஓட்டு போடுவார்களா?, நல்ல தலைவர்கள் வருவார்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பூம்பூம் மாடு ஆம் என்பது போல் தலையை அசைத்தது.
தொடர்ந்து குடுகுடுப்பை காரர்கள் குடுகுடுப்பையை அடித்தவாறு நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது வருகிற 6-ந் தேதி பொதுமக்கள் எல்லோரும் வந்து வாக்களியுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடினார்.
100 சதவீதம் வாக்குப்பதிவு
அதன் பிறகு கலெக்டர் பேசுகையில் கடந்த தேர்தலில் பாச்சல் பஞ்சாயத்து பகுதியில் 65 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவாகி உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டினை விலை பேசி விடாதீர்கள், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் இப்பகுதிக்கு வளர்ச்சியை கொண்டு வரும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், திட்ட அலுவலர் மகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
Related Tags :
Next Story