தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2021 6:02 PM IST (Updated: 16 March 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அலங்கார பாண்டியன் மகன் சரண்ராஜ் வயது (24). தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் அவர் பணத்தை வீட்டில் செலவுக்கு கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதை அவரது தாய் முத்துலட்சுமி கண்டித்துள்ளார். சம்பவத்தன்று சரண்ராஜ், தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்ராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story