வாக்குச்சாவடி பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
திண்டுக்கல்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த 7 தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.
மேலும் அவை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொருட்கள் அனுப்பும் பணி
இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குச்சாவடி பொருட்கள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கான படிவங்கள், வாக்குச்சாவடி அலுவலர் கையேடுகள், தபால் வாக்கு உறைகள் உள்பட பல்வேறு பொருட்கள் வந்துள்ளன.
அவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.
அதேநேரம் தேர்தலுக்கு 3 வாரங்களே உள்ளன. இதனால் வாக்குச்சாவடி பொருட்கள் 7 தொகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து அவை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story