ஓடையில் கிடந்த மூட்டையால் பரபரப்பு
சின்னாளப்பட்டி பஸ்நிலையம் அருகே ஓடையில் கிடந்த மூட்டையால் பரபரப்பு
சின்னாளப்பட்டி :
சின்னாளப்பட்டி பஸ்நிலையம் அருகே, தனியார் திருமண மண்டபத்துக்கு பின்புறத்தில் உள்ள ஓடையில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, மெத்தை உறையில் ஜிப் மூடப்பட்ட நிலையில் மூட்டை ஒன்று இருந்தது. அதற்கு ஒரு குழந்தையின் உடலை கட்டி மர்ம நபர்கள் போட்டு சென்றிருப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் சின்னாளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி மற்றும் துப்பரவு பணியாளர்கள் அங்கு வந்தனர்.
பின்னர் மெத்தை உறை ஓடையில் இருந்து கரைக்கு கொண்டு வந்து பிரித்து பார்க்கப்பட்டது. அப்போது, ரத்தக்கறையுடன் கூடிய ஒரு நாயின் உடல் இருந்தது. மர்மநபர்கள் நாயை அடித்து கொன்று மெத்தை உறையில் வைத்து ஓடைக்குள் வீசி சென்றிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் சின்னாளப்பட்டியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story