போலீசார்-துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை
திட்டச்சேரி அருகே போலீசார்-துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி அருகே போலீசார்-துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 19-ந்தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு்ள்ளது. இந்த தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் நாகை சட்டமன்ற தொகுதி திட்டச்சேரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உத்தரவின் பேரில் திட்டச்சேரி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் காரைக்கால்-நன்னிலம் சாலையில் உள்ள வாழ்மங்கலம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கார், வேன், பஸ்கள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
இதேபோல் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், கங்களாஞ்சேரி, அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், சேஷமூலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story