ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 100க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பறக்கும் படையினர் சோதனை
போடியில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பறக்கும் படையினர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
போடி:
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் போடி சுப்புராஜ் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி, தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று அவரது வீட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டின் முன்பு 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே அந்த வழியாக ஓட்டு சேகரிக்க சென்ற எதிர்க்கட்சியினர், ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிற்பதை பார்த்து பணம் வினியோகம் செய்யப்படுவதாக சந்தேகித்தனர். மேலும் இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த பறக்கும் படை அதிகாரிகள், துணை முதல்-அமைச்சரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சோதனை நடத்தினர். ஆனால் அவற்றில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் போடியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story