திருக்கோவிலூர் அருகே வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் உளுந்தூர்பேட்டையில் பொன்முடி உருவம் பொறித்த டீ.சர்ட்டுகள் சிக்கின

திருக்கோவிலூர் அருகே வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் உளுந்தூர்பேட்டையில் பொன்முடி உருவம் பொறித்த டீ.சர்ட்டுகள் சிக்கின
x
தினத்தந்தி 16 March 2021 11:09 PM IST (Updated: 16 March 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் உளுந்தூர்பேட்டையில் பொன்முடி உருவம் பொறித்த டீ.சர்ட்டுகள் சிக்கின

திருக்கோவிலூர்

கருவேப்பிலை வியாபாரி

வல்லம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் உமாசங்கரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருக்கோவிலூர்- கடலூர் சாலையில் உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் பருவதராஜகுரு தெருவை சேர்ந்த கருவேப்பிலை வியாபாரி அருள்குமார் எந்தவித ஆவணமும் இல்லாமல் எடுத்து வந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

டீ.சர்ட்டுகள் பறிமுதல்

அதேபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது காருக்குள் திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்முடியின் உருவம் பொறித்த டீ.சர்ட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த டீ.சர்ட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story