ஆற்காட்டில் போலி பணி நியமன ஆணையை காட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர முயன்ற என்ஜினீயர் பிடிபட்டார்.


ஆற்காட்டில் போலி பணி நியமன ஆணையை காட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர முயன்ற என்ஜினீயர் பிடிபட்டார்.
x
தினத்தந்தி 16 March 2021 11:25 PM IST (Updated: 16 March 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் போலி பணி நியமன ஆணையை காட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர முயன்ற என்ஜினீயர் பிடிபட்டார்.

ராணிப்பேட்டை

போலி நியமன ஆணை

வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள வடுகன்குட்டை பகுதியை சேர்ந்தவர், கோபிநாத் (வயது 23). என்ஜினீயர். இவர் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்தார். தாசில்தார் காமாட்சியிடம், தான் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர உள்ளதாக கூறி தன்னிடம் இருந்த பணி நியமன ஆணையை வழங்கினார். 

அதை வாங்கிப் பார்த்த தாசில்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது குறித்து அவர் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக உதவி கலெக்டர் இளம்பகவத் ஆற்காடு தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். போலி ஆணையுடன் பணியில் சேர வந்திருந்த கோபிநாத் மற்றும் அவருடன் வந்திருந்த அவரது தந்தை பழனி (52), தாய் சந்தியா (38) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். 
அதில் பணி நியமன ஆணை போலியானது என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் வேலை தேடிக் கொண்டு இருந்த கோபிநாத்துக்கு காட்பாடி தாலுகா அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்காக ரூ.5 லட்சத்தை கோபிநாத்தின் தந்தையிடம் பெற்றுக்கொண்டு, போலி பணி நியமன ஆணையை வழங்கியுள்ளதும் தெரிய வந்தது.

 போலி கையெழுத்து

மேலும் இந்த போலி பணி நியமன ஆணையில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோரின் கையெழுத்தை போலியாக போட்டுள்ளதும் தெரிய வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story