விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 March 2021 11:33 PM IST (Updated: 16 March 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் வாலிபர் பலி.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 35). இவரும் அதே பகுதியை சேர்ந்த முனியசாமி (46) என்பவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் அருகே ஐந்திணை பூங்கா அருகில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த வேலாயுதம் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த முனியசாமி முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story