7 வீடுகள், மளிகை கடைகள், டீக்கடை எரிந்து நாசம்
திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 வீடுகள், மளிகை கடைகள், டீக்கடை எரிந்து நாசமடைந்தது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 வீடுகள், மளிகை கடைகள், டீக்கடை எரிந்து நாசமடைந்தது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
தீப்பிடித்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியில் ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் மதியம் சுமார் 3 மணி அளவில் இப்பகுதியில் உள்ள ஒரு கூரைவீட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அருகே இருந்த கூரை வீடுகளுக்கும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளிேய ஓடி வந்தனர். அப்போது காற்று பலமாக வீசியதால் கூரை வீடுகளில் பற்றி எரிந்த தீ அருகே இருந்த 2 மளிகை கடைகள் மற்றும் ஒரு டீக்கடைக்கும் பரவியது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
7 வீடுகள் நாசம்
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் ஒரே நேரத்தில் வீடுகள் மற்றும் கடைகள் தீப்பிடித்து எரிந்தது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த கீதா, பாலமுருகன், தங்கராஜ், மணிவண்ணன், பாலகுமார், கண்ணன், கார்த்திக்ராஜா ஆகிய 7 பேரின் வீடுகள் முற்றிலும் எரிந்து வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, மெத்தை, டி.வி., மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நாசமடைந்தன. மேலும் மளிகை கடைகள் மற்றும் டீக்கடைகளில் இருந்த பொருட்களும் தீயில் கருகி நாசமடைந்தன.
ரூ.55 லட்சம் பொருட்கள் சேதம்
சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.55 லட்சம் என கூறப்படுகிறது. தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்கள் உருக்குலைந்து கிடந்த தங்கள் வீடுகளை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்த திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது என விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story