தேர்தல் புறக்கணிப்பு


தேர்தல் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 17 March 2021 12:13 AM IST (Updated: 17 March 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் புறக்கணிப்பு

காரைக்குடி
காரைக்குடி-மதுரை புறவழி நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காரைக்குடியிலிருந்து மேலூர் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்து கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி பகுதியில் வசிப்பவர்களின் வீடுகள், விளை நிலங்கள், நீர்நிலைகள், வழிபாட்டு தலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே மாற்றுப்பாதையினை தேர்வு செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து மாற்றுப்பாதைக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் சர்வே செய்து வைத்திருந்த பகுதியிலேயே மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து பாதரக்குடி பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், மாற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தியும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

Next Story