11 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம்
11 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம்
ராமநாதபுரம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்தார்.
அடையாள அட்டை
வருகின்ற ஏப்ரல் 6-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டினை மட்டும் ஆவணமாக கொண்டு வாக்களிக்க இயலாது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையை அளிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் பணி அட்டை, வங்கி அஞ்சலக கணக்கு புத்தகங்கள் புகைப்படத்துடன் கூடியது.
பாஸ்போர்ட்
தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், சட்டமன்ற,சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story