34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கரூர்
வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கரூர் மாவட்டத்தில் 18 பறக்கும் படையினரும், 18 நிலையான ஆய்வு செய்யும் குழுவினரும், தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் 4 குழுவினரும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், கரூர் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட வாங்கல்-மோகனூர் சாலையில் உள்ள வாங்கல் சோதனை சாவடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு எண்-6 அமுதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாங்கல் செக்குமேட்டு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையை ஏற்றி வந்தார். மூட்டையின் மேல் மாட்டுத்தீவனம் என்று எழுதப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சுமார் 31 கிலோ இருந்தது. இதேபோல, என்.புதூர் நடுத்தெருவை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் பெட்டியில் அடைத்து கொண்டு வந்த சுமார் 3 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வாங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story