பள்ளி மாணவர்களும் செயற்கைகோள் தயாரிக்க முடியும் என்பதற்கு தமிழகம் எடுத்துக்காட்டு்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்


பள்ளி மாணவர்களும் செயற்கைகோள் தயாரிக்க முடியும் என்பதற்கு தமிழகம் எடுத்துக்காட்டு்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
x
தினத்தந்தி 17 March 2021 1:48 AM IST (Updated: 17 March 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் கூட செயற்கைகோள் தயாரிக்க முடியும் என்பதற்கு தமிழக மாணவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதத்துடன் கூறினார்.

ஜெயங்கொண்டம்:

நாட்டின் எதிர்காலம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதேபோன்று தேர்தலிலும் பிள்ளைகளும், பெற்றோரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. இளைஞர்களின் எதிர்காலம் நாட்டின் எதிர்காலம். அதேபோன்று நமது வாக்கு நமது நாட்டின் எதிர்காலம்.
மிகச்சிறந்த சாதனை
இந்திய விண்வெளித்துறை உலக அளவில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முதல் 5 இடங்களில் உள்ளது. எடை குறைவான செயற்கைகோளை ஏவுவதில் உலக நாடுகள் இந்தியாவின் உதவியை பெற்று செயற்கைக்கோள்களை ஏவி வருகின்றன. பள்ளி மாணவர்கள் கூட செயற்கைக்கோள் தயாரிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அதற்கான தொழில்நுட்பம் அறிந்து, அதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவு நாளில் 100 சிறிய குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்கள் பலூன் மூலம் ஏவப்பட்டது மிகச்சிறந்த சாதனை. அதில் இருந்து பெறப்பட்ட தரவுகளை விண்வெளியில் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளோடு ஒப்பீட்டு முறையில் ஆய்வுகளை மேற்கொள்ள மிக உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story