விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
தாயில்பட்டி,
100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஏழாயிரம் பண்ணை நாடார் மகமை மேல்நிலைபள்ளி வளாகத்தில் தொடங்கியது. பஸ் ஸ்டாண்ட், அரண்மனைகாரத்தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக இந்த பேரணி சென்றது. பேரணிக்கு நாடார் மகமை பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிவநடராஜன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏழாயிரம் பண்ணை சப்- இன்ஸ்பெக்டர ்ராமசாமி, பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story