திருச்சி மாவட்டத்தில் 5 பேர் வேட்பு மனு தாக்கல்
திருச்சி மாவட்டத்தில் நேற்று 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் வேட்பு மனு தாக்கலின் மூன்றாவது நாளான நேற்று 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன்படி மணப்பாறை தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணகோபால், நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் வனிதா ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதுபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் விடியல் வளர்ச்சி பேரணி என்ற கட்சி வேட்பாளர் எம்.விஜயமோகனாஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த தொகுதியில் ஏற்கனவே நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்திருந்த அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகரன் கூடுதலாக ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர். மண்ணச்சநல்லூரில் சுயேச்சை வேட்பாளர் வி.எம்.செல்வராஜ், முசிறி தொகுதியில் ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா சார்பில் கவுதம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story