பல்லடம் அருகே கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடித்து வைத்து பாறை உடைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


பல்லடம் அருகே  கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடித்து வைத்து பாறை உடைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 March 2021 2:01 AM IST (Updated: 17 March 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடித்து வைத்து பாறை உடைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம்
பல்லடம் அருகே  கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடித்து வைத்து பாறை உடைப்பதை கண்டித்து   பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சாலை மறியல் 
பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில், ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்குவாரியில் பாறையை உடைக்க வெடி வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட அதிர்வால் அருகே உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு கட்டப்பட்டிருந்த நில மட்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.
 இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சக்தி வாய்ந்த வெடி வைத்து பாறைகள் உடைப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோடங்கிபாளையம் மெயின் ரோட்டில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை 
இது பற்றி தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீ ராமச்சந்திரன், தாசில்தார் தேவராஜ், கனிமவளத்துறை துணை இயக்குனர் வேடியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து  சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

Next Story