புதிதாக 13 பேருக்கு கொரோனா


புதிதாக 13 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 March 2021 2:03 AM IST (Updated: 17 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 13 பேருக்கு கொரோனா

மதுரை, மார்ச்.17-
மதுரையில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 7 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 82 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அனைவரும் முககவசம் அணிந்து நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பான முறையில் பின்பற்றிட வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story