நூற்பாலைகளுக்கு மட்டும் பஞ்சு வினியோகம்
நூற்பாலைகளுக்கு மட்டும் பஞ்சு வினியோகம்
திருப்பூர்
இந்திய பருத்தி கழகம் மூலம் நூற்பாலைகளுக்கு மட்டும் பஞ்சு வினியோகம் செய்ய வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்பாலைகள்
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூல் விலை உயர்வின் காரணமாக தொழில்துறையினர் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதானால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே பெற்ற ஆர்டர்கள் பலவும் ரத்தாகி வருகிறது.
நூல் விலை உயர்வின் காரணமாக பனியன் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால், முன்பு போட்ட ஒப்பந்தப்படி அந்த விலைக்கு ஆடைகளை உற்பத்தியாளர்களால் செய்துகொடுக்க முடியவில்லை. இதுபோல் புதிய ஆர்டர்களை பெறவும் முடியாத நிலை உள்ளது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்தே வருவதால், ஆடைகளின் விலையும் நிர்ணயம் செய்யப்பட முடியாமல் உள்ளது. இதனால் இந்திய பருத்தி கழகம் நூற்பாலைகளுக்கு மட்டும் பஞ்சு வினியோகம் செய்ய வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சு வினியோகம்
இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவதுதிருப்பூரில் ஆடை தயாரிப்பை ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக பின்னலாடை தொழில் இருந்து வருகிறது. இந்நிலையில் நூல் விலை உயர்வு பின்னலாடை வர்த்தகத்தை சரிவை நோக்கி சென்றடைய வைக்கிறது. இது குறித்து பலமுறை நூற்பாலைகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக நூல் விலையை மேலும் உயர்த்தின. தற்போது நூல் பதுக்கலும் நடந்து வருகிறது. செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி நூல் விலையை உயர்த்தி வருகிறார்கள். எனவே இதனை தடுக்கும் வகையிலும், நூல் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நூற்பாலைகளுக்கு மட்டும் பஞ்சு வினியோகம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பஞ்சு வினியோகம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story