மூளைச்சாவு அடைந்த திருச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரணம்


மூளைச்சாவு அடைந்த திருச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரணம்
x
தினத்தந்தி 17 March 2021 2:17 AM IST (Updated: 17 March 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சாவு அடைந்த திருச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்தார்.

திருச்சி, 
திருச்சி மாநகர பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்து வந்தவர் மணப்பாறையை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் (வயது 50). கடந்த 4 நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் பணியில் இருந்த செல்வத்துக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, செல்வம் மூளைச்சாவு அடைந்து ‘கோமா' நிலைக்கு சென்று விட்டதாகவும் மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். பின்னர் அவர், மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story