ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 11.6 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். இதில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல் பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களிலும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story