கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 March 2021 3:33 AM IST (Updated: 17 March 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு
பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக பவானி செங்காடு 2-வது வீதியை சேர்ந்த செந்தில் (வயது 46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா விற்ற வழக்கில் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் குமரன் வீதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (44) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர். கைதான செந்தில், சத்தியமூர்த்தி ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின்பேரில் செந்தில், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்கடர் உத்தரவிட்டார். அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மொத்தம் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

Next Story