ஆழ்வார்குறிச்சி அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
ஆழ்வார்குறிச்சி அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட செங்கானூரில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு செல்லும் வழியில் ெரயில்வே பாதை உள்ளது. இந்த பாதையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனால் மழைக்காலத்தில் ஊரைவிட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதை மாற்றி தரும்படி பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்பும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை, கடந்த மாதம் தாசில்தார் பார்வையிட்டு கட்டாயமாக மாற்றுப்பாதை அமைத்து தருவதாக கூறியதும் அப்போது நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் அதை சரிசெய்யாததால் தங்களது ரேஷன் கார்டுகளை பதிவு தபாலில் தென்காசி தாசில்தாருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காததால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
Related Tags :
Next Story