ஹெலிகாப்டர் தரை இறங்க அனுமதி மறுப்பு: குமாரபாளையத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ரத்து கட்சியினர் ஏமாற்றம்


ஹெலிகாப்டர் தரை இறங்க அனுமதி மறுப்பு: குமாரபாளையத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ரத்து கட்சியினர் ஏமாற்றம்
x
தினத்தந்தி 17 March 2021 8:11 AM IST (Updated: 17 March 2021 8:35 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் தரை இறங்க அனுமதி மறுப்பு: குமாரபாளையத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ரத்து கட்சியினர் ஏமாற்றம்

குமாரபாளையம்,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வந்து அங்கு பிரசாரம் செய்து விட்டு பின்னர் சேலம் புறப்படுவதாக சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கமல்ஹாசன் பயன்படுத்துகின்ற ஹெலிகாப்டர் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இறங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்தது. 
ஆனால் ஹெலிகாப்டர் தரை இறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக நேற்று மாலை 3 மணிக்கு குமாரபாளையம் தொகுதியில் கமல்ஹாசன் பிரசார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் குமாரபாளையம் சட்டசபை தொகுதி வேட்பாளர் காமராஜ் கூறுகையில், கமல்ஹாசன் குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி அங்கிருந்து கார் மூலம் வெப்படை, பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் பவானி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் ஹெலிகாப்டர் தரை இறங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதையொட்டி அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதே மாதத்தில் வேறு ஒரு தேதியில் மீண்டும் கமல்ஹாசன் வந்து குமாரபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்வார் என்றார். கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் அவரது கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story