கட்சிக்கு அப்பாற்பட்டவர்களை ஈர்த்த தி.மு.க. வேட்பாளர் மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன்
கட்சிக்கு அப்பாற்பட்டவர்களை தி.மு.க. வேட்பாளர் மண்ணச்சநல்லூர் எஸ்.கதிரவன் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
திருச்சி,
மண்ணச்சநல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எதுமலை, பாலையூர், வரதராஜபுரம், கரியமாணிக்கம், ஸ்ரீபெரம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கட்சிக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை வீடு வீடாக சென்று மண்ணச்சநல்லூர் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவன் மக்களை சந்தித்து மக்களுக்கான அடிப்படை தேவைகள், தொகுதிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று கூறி ஆதரவு திரட்டி வருகிறார். தொடர்ந்து மத சார்பற்ற கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நீலவானனை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இவருடன் ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.பி.இளங்கோவன் மற்றும் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகளும் வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளான பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்கப் படும் என்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி தளபதி ஸ்டாலின் அவர்களை முதல்வர் அரியணையில் அமர்த்த வேண்டும். தி.மு.க.வின் விடியல் ஆட்சி அமைய வேண்டும் என்று வாக்கு கேட்டு வருகிறார்.
ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் மற்றும் பெண்கள், தாய்மார்கள் தி.மு.க.வின் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்கள் சிலிண்டரின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தி.மு.க. ஆட்சியில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்கள்.
Related Tags :
Next Story