உடன்குடியில் அபூர்வ துஆ பிரார்த்தனை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு
உடன்குடியில் நடந்த அபூர்வ துஆ பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி:
உடன்குடி பெரிய தெருவில் உள்ள ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் 30-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி உலகம் மற்றும் இந்தியாவின் நன்மை வேண்டி அபூர்வ துஆ பிரார்த்தனை நிகழ்ச்சி 3 நாள் நடந்தது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி சிறப்பு தொழுகையுடன் விழா தொடங்கியது. கடந்த 16-ந் தேதி பல்வேறு முக்கிய நபர்களின் மார்க்க சொற்பொழிவுகள் நடந்தது. புகாரிஷ் ஷரீபு சபையின் தலைவர் செய்யிது நூஹூ முஹ்யத்தீன் தலைமை தாங்கினார். முஹம்மது ஷாஹ் மஹ்ழரி கிராஆத் ஓதினார். ஜஹ்பர் சாதிக், ஆஸ்பர் ஆலிம், ஷம்சுல் ஹூதா, மக்தூம் லத்தீப், ரஹ்மத்துல்லாஹ், ஹமீது சுல்தான் ஆகியோர் இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புகள், வாழும் முறை குறித்து பேசினார்கள்.மேலப்பாளையம் மன்பவுல் பாக்கியாத் மகளிர் அரபுக் கல்லூரி நிறுவனர் கே.ஏம்.காஜா முஹ்யித்தீன் சிறப்புரையாற்றினார். நேற்று காலை 9 மணிக்கு ஆபூர்வ துஆ பிரார்தனை நிகழ்ச்சி நடந்தது. காயல்பட்டினம் அல்மமத்ரஸதுல் ஹாமிதிய்யா கல்லூரி பேராசிரியர் எம்.எஸ்.காஜா முஹ்யத்தீன் அபூர்வ துஆ ஓதினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸஹீஹூல் புகாரீஷ் ஷரீபு சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story