ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.58 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து 4 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்படை, 3 நிலைத்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக ரூ.58 லட்சத்து 65 ஆயிரத்து 600 மற்றும் இதுதவிர உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 122 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒப்படைப்பு
இதில் 46 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களின் ரூ.45 லட்சத்து 67 ஆயிரத்து 330 திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 6 வழக்குகளில் ரூ.4 ஆயிரத்து 530 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 52 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.45 லட்சத்து 71 ஆயிரத்து 860 மற்றும் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story